Saturday, November 10, 2012

நீ வந்தாய்...



எதிர்பாராத மழை போல் 
இன்று நீ வந்தாய் - மழை 
நின்ற பின் தூறல் போல் 
உன்னுடன் இருந்த 
ஒவ்வொரு நிமிடத்தையும் 
என்னுள் திரையிடுகிறாய் ..


மனதில் ஒரு சலனம் 
என்னுள் -இருப்பினும்
நம் விழிகள்பேசிய மொழியில் 
நீ புரிந்திருப்பாய் -என் 
நிலையை ... :(:(

Tuesday, October 30, 2012

வாழ்க்கை பருவ காலம் .





அனல் காற்று புழுதியை  
வாரி வீசியது போல் 
எண்ணம் எனும் காற்று
சோகத்த்தை வீசிய  - மீண்டும் ஓர் 
வெயில் காலத்தை வெறுக்குது.

மனம் குளிரும் மெல்லிய 
பனி மூட்டம் கூடிய -  ஓர் 
பனிக்காலத்துக்கு
இதயம் ஏங்குது .

வாழ்க்கை எனும் என் செடிக்கு 
உயிர் கொடுக்க -ஓர் 
இளவேனில் காலத்துக்காய் 
வேண்டி நிற்கிறது.

மனப்பரப்பை ஜெயிக்கும் 
எண்ணம் படைத்த 
உறைபனி மூடியிருக்கும்  -
ஓர் பின்பனிக் காலம் 
தொடர வேண்டியது 

விழியில் விழி நீர் உற்றெடுக்க  - 
ஓர் மழைக் காலத்துக்காய் 
ஏங்குது .

வாழக்கை எனும் செடியில் உள்ள
வாடிய மலர் போன்ற என் மனம் - 
ஓர் வசந்த காலத்துக்காய்
ஏங்குது .








Wednesday, October 24, 2012

இப்பயணம்




பிறப்பெனும்  கரையில் ஆரம்பித்த 
இறப்பெனும் மறு கரையில் முற்றும் 
-இப்பயணம் 

ஏறினேன் ஓர் படகில் 
வழிகாட்டியாய் நல்லதோர் 
படகோட்டியும் , 
இணைந்தனர் புதிய முகங்களும் 
கழிந்தது ஆறு மாத பயணம் 

கடலில் மிதக்கும் 
காகித ஓடம் போன்று 
என் இலக்குகள் தத்தளிக்க

ஆழ்கடலில் தோன்றிய 
மாய விம்ப சாயலிலான 
உள்மனம் 
என்னை அழைக்க 

நானோ செய்வதறியாது  
குதித்தேன் - அழ்கடலில்

வரும் ஓர் படகுக்காய் 
காத்திருக்கிறேன் 
இலக்கை அடைவேனோ..!!
இல்லையேல் 
மீண்டும் கரையை 
அடைவேனோ ..!!

Saturday, October 6, 2012

என் கவிதையும் அர்த்தமுறும்.




படிக்காத கவிதைக்கு 
அர்த்தம் இல்லை 
அது போல் என் 
காதலும் அர்த்தமற்றதாய் 
போகுமோ .!!!

என் கவிதைக்கு 
அர்த்தம் கிடைக்கும் 
தருணம்
நாம் விரல் கோர்த்து 
நடக்கும் 
காலம் 

அன்று 
என் கரு விழி 
திரையிடும் உன் விம்ப 
நினைவுச்சாரளுக்கு 
முற்று புள்ளி .

Saturday, September 15, 2012

புரியாத அன்பினால் ...


என்னை என்றும் ஏக்கமில்லாமல் 
காப்பவள் 
என்னவள் தான் 
எனபதை உணர்ந்தேன் -அந்நாளில் 

என் வாழ்க்கையின் 
மூன்றில் இரண்டு 
அவளுடன் தான் 
என்பதை  புரியாத  அன்பினால் 
எனக்கு உணர்த்தினாள்- இந்நாளில் 

Thursday, August 30, 2012

கைகள் ஒன்று கூடாதோ ...



மலர் மீது உள்ள குழி போல்
நீ புன்னகைக்கும் கணத்தில் உதிக்கும் 
கன்னக்குழியில் தானா ..

அதிகாலையில் செடிக்கு 
ஊற்றும் நீரின்
குளிர்மையில் தானா ..

நொடிப்பொழுதில் ஆயிரம் 
கதை பேசும் 
உன் விழி அசைவில் தானா ..

என்னுடன் பேசிய 
பதுமையனா 
மொழியில் தானா ...

என்  உவமைக்குள் அடங்காதது 
 நீ என் மீது கொண்ட 
பாசத்தில் தானா ..

என் மனம் கரைந்தது ..!!

Friday, August 17, 2012

காதல் நெய்தது.....


உன்னில் நான் கொண்ட உறவை 
சொந்தம் கடந்த காதல் நெய்தது ,
நீ வடக்கிலும் 
நான் மேற்கிலும் 
என்ன அதிசம் தூரம் 
நம்மை பிரித்தலும் , 


நொடி பொழுது உன்னை நினைத்தால்
உன்னருகில்  நான் இருப்பதை உணர்கிறேன் ,
நிழல் கடந்து 
நிஜத்தில் வாழும் 
வரத்தை தினம் வேண்டுகிறேன் 

Saturday, July 14, 2012

இரு பறவைகளாய் .




கனாவில் நானும் நீயும் தினமும் 
காதலெனும்  கூட்டில் 
இரு பறவைகளாய் -
மனதை பறக்க செய்தது 
உன்  மலரெனும் வதனமடி ,
என்ன மாயம் இது ..!
உன் அன்பு என்னும் சொர்க்கத்தில் 
கரைந்தது  என் மனம் ...

Saturday, July 7, 2012

என் இதயம் ;



உன்  நினைவுகள் என் இதயத்தை அழுத்த 
தினம்தோறும் கனவுகளில் - நீ 
உன் கரம் பற்றி என் தனிமைக்கு
தனிமையை பரிசளிக்க -ஏங்குதடி 
என் இதயம் ;




Friday, June 22, 2012

நம் உறவால் உறவாவோம்



உன் புன்னகையால் என்னை அபகரித்தாய்
உன் மொழியை என்னில் இசைத்தாய்
உன் கன்னக்குழியில் என்னை புதைத்தாய்

என் தனிமையை நீ ரசிக்க வைத்தாய்
என் கனவுகளுக்கு உயிர் கொடுத்தாய்
என் உயிரில் பாதி ஆனாய்

நாம் என்ற வார்த்தைக்கு
அர்த்தம் புகட்டினாய்

என்னில் நீயும்
உன்னுள் நானுமாய்
நம் உறவால் உறவாவோம்






Sunday, June 17, 2012

உனக்காய் வாழ்கிறேன் ..



நம்முள் இடைவெளி
அதிகரிக்க கணக்கிறேன் ...

விழிகள் தாங்கும்
உன் கனவுகளை
தினமும் ரசிக்கிறேன் ...

உன்னை சேரும்
கணத்துக்காய்
கனவை யாசிக்கிறேன் ..

என்னியவளே -
இருவரும் 
கலந்து கரையும்
நொடிக்காய் காத்திருப்பேன் .............

Thursday, June 7, 2012

அவள் தான்...



என்னுள் அவள் நுளைந்தாள்
நான் கற்பனையில் மிதந்தேன்
என்னை இழந்தேன்
பூவை போன்ற
மென்மையானவள்
ஆயினும்
என்னை புரிந்தவள்
அவள் தான்... .

Saturday, May 26, 2012

இல்லாமையால்....


உன் வார்த்தைகளால் நீ
என் இதயத்தை வருடிய வேளை
உன் புன்னகை
என் இதயத்தை கரைத்த வேளை
நான் என்னை இழந்தேன்- உன்னில்

நீ என்னுடன் இருந்த நாவேட்டு மணி நேரம்
பூமி சுழல்வதை மறந்தேன் -இன்று தேர் ஓடுவது போல
பூமி சுற்றுவதை உணர்கிறேன்- நீ
என்னிடத்தில் இல்லாமையால்

Saturday, May 12, 2012

உறவே ...!!!





ஆயிரம் சொந்தங்கள் 
என்னருகில் இருந்தாலும்
பூக்கள் தம் இதழை 
துணை தேடுவது போல்
என் நெஞ்சம் ஏதோ 
உன்னை துணை((வி))யாக தேடியதே..
உறவே ...!!!



Monday, May 7, 2012

உன் அன்பால்..



உன் அன்பால் உருகிய
என் இதயம் 
என்னுள் நீ கொண்ட உறவு 
என்ன என்று அறியாமல்
துடிக்குதடி. 


என் வாழ்வின் நிலவுக்குகாலம் 
சுழன்று போக 

உயிர் விட்டு உடல்
பிரிவதை உணர்ந்தேன் -இன்று
உன்னாலடி


Thursday, April 12, 2012

இதம் தேடுகிறது ...


வருடங்கள் கழிகின்றன 
பண்டிகைகள் சுலழ்கிறது ..
மனமது இதம் தேடுகிறது 
காலமோ இடம் கொடுப்பதாய் இல்லை ..!!
காணும் கனவுகள் கானல் நீராயும்,
நிஜங்கள் ரணங்களாய் வாட்டுகிறது ..