அனல் காற்று புழுதியை
வாரி வீசியது போல்
எண்ணம் எனும் காற்று
சோகத்த்தை வீசிய - மீண்டும் ஓர்
வெயில் காலத்தை வெறுக்குது.
மனம் குளிரும் மெல்லிய
பனி மூட்டம் கூடிய - ஓர்
பனிக்காலத்துக்கு
இதயம் ஏங்குது .
வாழ்க்கை எனும் என் செடிக்கு
உயிர் கொடுக்க -ஓர்
இளவேனில் காலத்துக்காய்
வேண்டி நிற்கிறது.
மனப்பரப்பை ஜெயிக்கும்
எண்ணம் படைத்த
உறைபனி மூடியிருக்கும் -
ஓர் பின்பனிக் காலம்
தொடர வேண்டியது
விழியில் விழி நீர் உற்றெடுக்க -
ஓர் மழைக் காலத்துக்காய்
ஏங்குது .
வாழக்கை எனும் செடியில் உள்ள
வாடிய மலர் போன்ற என் மனம் -
ஓர் வசந்த காலத்துக்காய்
ஏங்குது .








0 comments:
Post a Comment