Friday, December 30, 2011

கரையும் 2011




எதிர்பார்ப்புக்கள் நிறைந்த வாழ்க்கை
கானல் நீராய்  போக-  ஈரமான நெஞ்சம்
நீர் வற்ற
இழப்புக்கள் , பிரிவுகள் ஒருமித்ததாய்
எனக்கு பரிசளித்த 
உறவின் உண்மையை என்னில் புகட்டி
கரையும் 2011 

உண்மை நட்பின் ஆழத்தை
எனக்கு உணர வைத்து ,
நா வன்மையில்
ஆறுதல் அளித்த
என் தோழமை -நட்புக்கு
கல்வெட்டாய் 2011

புது உறவுகளின்
அறிமுகத்தை எனக்கு
வெளிச்சமிட்ட 2011

ஈற்றில் சேற்றில் பூக்கும்
தாமரை போல்
கவலைகள் நிறைந்த சேற்றில்
என் சொந்தத்தின் 
பெறுபேறு
தாமரையாய் -என்னில்
விதைத்த 2011




Wednesday, November 30, 2011

கல்லூரியா ..!!



கல்லூரி எங்கும் காதல் 
பூந்தோட்டம் பூத்து குழுங்கிறது- தினமும் 
புதிதாய்  பூக்கும் பூக்களும் ,
வாடி விழும் வாடழுமாய் -காதல்
பூப்பதும் வாடுவதுமாய் 
இளம்  காதல் நிறைந்த
 மாய உலகமாய் -என் கல்லூரி 


இதில் பூரிப்பு உற்ற  எம் 
ஆய்வு கூட கணினியும் காதல் மொழி 
பேசுகிற போல் உணர்வு ..
இருக்கைகள் எங்கும் இரு 
இதயங்களின் சேரல் ,பகிர்வு -
காதலின் சின்னம் தாஜ்மஹால் கூட 
தோற்றிடுமோ என  எண்ண தோன்றும்...
கல்வியுடன் காதலின்
 இருப்பிடம் -கல்லூரியா ..!!

Friday, November 11, 2011

மாயை



மெய்யாய் நானும் மாயமாய்  நீயும் 
காதலித்தோம் 
காலங்கள் இதற்க்கு சாட்சி -யடி 
என் காதலியே ..

இரவு சூழ்ந்ததும் கனவுகள் முழுவதும் 
விடிந்ததும் காணும் பொருள் எல்லாம் 
உன் விம்பம் என் விழித்திரையில் -யடி 
என் காதலியே ..


நிலவொளியில் நான் உன்னுடன் கதை 
பேசிக்கொண்டு இருந்தேன் மணி நேரம் கூட
நொடியாய் விரைய என்னுள் நீ கலந்தாய் 
என்ன மாயம் மணி நேரமும் என் நிழலுடன் -யடி
என் காதலி ...

காதல் எனும் மாய மலர் வனத்தை
என்னுள் அமைத்து புதிய மாய உலகம்
 உணர வைத்தாள் -மாயை 

Saturday, September 10, 2011

வாழ்க்கைப் பயணம்



ஜனனம் மரணம் இடைகளில்
தடைகளாய் விதிகளும் சதிகளும் 
படிக்கல்லாய்
வெற்றிகளும் சாதனைகளும் 

விதிகள் எல்லாம் விழிநீரில் கரைந்திடுமா 
சதிகள் எல்லாம் மதிகள் வெல்லுமா  
வெற்றிகள் எல்லாம் இலக்கணம் ஆகுமா 
சாதனைகள் எல்லாம் சரித்திரம் ஆகுமா


Wednesday, August 31, 2011

என் காலச்சக்கரம்


வரும் காலத்துக்கு முகவரி என்ன
என்று காலத்திடம் வினாவ
ஒரு நிமிடம் நிசப்தம்  அடைகிறது 
என் உளம்
விழிகள் எனும் இல்லத்தின் 
இமைகள் என்னும் கதவுகளை
 மெல்ல திறந்து விழிநீர்த்  துளி  
என் உடலை  மெல்ல நனைக்கிறது
அப்போது 
ஒரு கணம் என் சப்தம் அற்ற  உள்ளம்
என்னிடம் வினாத் தொடுக்கிறது 
நீ உன்னுள் செய்த  
சத்தியங்களின் நிலை என்ன ??...
பெரு மூச்சு விட்டபடி
கரங்கள் கன்னத்தை தடவுகிறது ...
இவ்வாறாக தினமும் என் காலச்சக்கரம் சுழல்கிறது ....

Wednesday, July 20, 2011

ஏன் இந்த வாழ்க்கை



எதிர் பார்ப்புக்கள் இல்லாத வாழ்க்கை 
இங்கு எவருக்கும் இல்லை 
எதிர் பார்ப்புக்கள் உள்ள வாழ்க்கை 
என்றும் இன்பத்தை தராது 
இந்த உலகத்தில் எவையும் 
எமக்கு சொந்தம் இல்லை 
சொந்தமாய் உள்ளவை என்றும் 
நிரந்தரம் அற்றது 
பணம் இருந்தால் உன்னை 
உனக்கு தெரியாது 
பணம் இல்லாதவனை உலகம் 
திரும்பியும் பார்க்காது 
உணர்வுகள் ஒழித்து வைத்தால்
நிம்மதி இல்லை 
உணர்வுகள் வெளிப்படும் போது
சோகம் குறைகிறது 
தூ ங்கிவிட்டால் உலகம் உன்னை 
விட்டு சென்றுவிடும் 
தோன்றவில்லை ஏன் இந்த வாழ்க்கை என்று 



Wednesday, July 13, 2011

உறவு



செல்வமும் ,மகிழ்ச்சியும் இருக்கும்
போது கூடும் உறவு ,
துன்பமும் ,வறுமையும் நம்மை நெருங்கும்
போது விலகுகிறது. 
அதை கண்டதும் 
தென்றலைவிட கனமற்ற என் உள்ளம் 
கனம் ஏறியதை உணர்கிறேன் .


Monday, July 11, 2011

பிறந்த நாள் வாழ்த்துக்கள்


அன்று என்னை கண்டதும் நீ 
இன்று உன்னை கண்டதும் நான் 
ஏனெனில் இந்நாள் 
அம்மா உன் பிறந்த நாள் 

என் கலங்கள் ஒவ்வொன்றும் இன்று 
உனக்கு வாழ்த்து சொல்கிறது என்னை அறியாமல் 

Tuesday, July 5, 2011

விழிநீர்



படிக்க கணணி முன் அமர்ந்தால்

திரையில் உன் உருவம் ,என் 
விழிகளில் என்னை அறியாமல் 
நீர் வழிகிறது ...

Wednesday, June 29, 2011

அம்மா..!


நான் சொன்ன முதல் வார்த்தை
எல்லோரும் சொல்லும் முதல் வார்த்தை.
நாங்கள் அன்றே சொன்ன முதல் கவிதை
அம்மா..!


ஆலயங்கள் தேடி சென்றாய்
 இறைவனிடம் வரம் கேட்டாய்
ஆதலால் எனக்கு ,
கடவுள் நம்பிக்கையை   தந்தாய் ..

அன்று உன் குரல் கேட்டு எழுந்த நான் 
இன்று உன் குரலுக்காய் தவம் இருக்கிறேன் 
என் உள்ளக் குமுறலை உன்னிடம் பகிர்ந்தேன் 
இன்று உன் உள வேதனையை அறியாத பாவியாக நான் 


அன்று என் விழியில் அரும்பிய ஒரு துளி நீருக்கு 
ஆயிரம் வார்த்தைகளில் ஆறுதல் கூறினாய் 
இன்று உன் விழியில் வரும் அருவிக்கு 
அணை போட தெரியாமல் நான் 

காலத்திடம் வினவுகிறேன் 
என் தாயின் மடி சாயும் உன்னத காலம் எப்போது ...??
இறைவா உன்னிடம் 
எண்ணும் நாட்கள் இன்னும் எவ்வளவு காலம் ...???




Sunday, March 27, 2011

உனக்காக ...



உன் புன்னகையில் 
கரைந்து போன என் மனது 
உன் புன்னகைக்காக காத்திருக்கிறது 

தாவணியில்  உன்னை போல் 
ஒரு தேவதை இவுலகில் இல்லை
தேவதையின் வருகைக்காக ....


Friday, March 11, 2011

என் உயிரை ..



உன்னோடு கலந்தது என் உயிர் 
ஒரு நொடி உன் தரிசனத்துக்கு காத்திருக்கிறது 
எந்தன் உயிர் உலகை விட்டு பிரியும்  முன் வந்திடு
உன் உருவில் சொர்க்கம் காண்பேன்  

உன் மீது கொண்ட எந்தன் அன்பை 
வெளியிட முடியாத ஊமை நெஞ்சம் என்னிடம் 
ஆனால் உன் மீது கொண்ட எந்தன் பாசம் 
மௌனமாக அழிகிறது என்னில் 


Saturday, March 5, 2011

அதிசய தேவதை



என் கனவில் வந்த அதிசய தேவதை நீ 
இன்று நேரில் என் முன் காதலியாக
என் இதயத்தில் குடிகொள்ளும் முதல் பெண்ணா  நீ 
மூவேழு வருட தனிமையில் ஓர் வசந்தம் 



Friday, February 25, 2011

ஓர் உறவு



என்னவளே 
நீ என் உறவு அது இயற்கையின் நியதியால் 
நம் உறவில் ஓர் உறவு தேடுகிறேன் 
அது நம்மில் ஓர் புதிய அத்தியாயம் .


Monday, February 21, 2011

விழியீர்ப்பு விசை



உன் கண்களை காண  துடிக்கும் -என் விழிகள் 
உன்னை கண்டதும் எனையறியாமல் ஆயிரம் கதைகள் பேசுகிறது 
உன் கண்ணின் விழியீர்ப்பு விசை இதுவா...!!




Saturday, February 5, 2011

காலைப்பொழுது ..


அழகிய பனிவிழும் நேரம் இது 
குளிர்மையான இளம் தென்றலால் தானோ 

பூக்கள் புன்னகைக்கும் நேரம் இது 
கதிரவனின் வரவில் தானோ 

நாளின் ஆரம்பம் இது -இயற்கை 
அன்னையின் கொடை இதுவா ..!!

உன் நினைவுகள்..



என்னை கேட்டா நீ என்னில் கலந்தாய் - ஏன் 
என்னை கேட்காமல் என்னை கலங்க  வைக்கிறாய் 
உன் நினைவுகளை மட்டும் ஏன் என்னிடம் விட்டு சென்றாய்
உன் நினைவுகள் என்னை ரணமாய் கொல்வதற்கா....



Friday, February 4, 2011

மௌனம்...


என் மௌனத்தையே உன்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் ...
என் வார்த்தைக்குள் ஒளிந்திருக்கும்
 நம் காதலை எப்படி நீ புரிந்து  கொள்வாய் ..

Wednesday, February 2, 2011

அழகான தேவதை


உன்னைப் போல் அழகானவள் 
இவ்வுலகில் கிடையாது எனக்கு 
நீ தான் என் இதயத்தில் 
குடியிருக்கும் அழகான தேவதை 
நீ எப்போது என் சொந்தம் ஆவது...???

என் மனம் ...


ஒரு மூங்கில் காட்டையே அழித்து
ஒரே ஒரு புல்லாங்குழல் செய்தேன் ...
ஊதும் போது தான் தெரியும்
அது உன்னை போல் ஊமை என்று ....
ஆனால் அதை ஊதுவதால்
அதன் இசையில்
என் மனம் ஏதோ நிறைவு அடைகிறது .

நம் உறவு ...!!



நிலையான அன்புக்கு பிரிவில்லை …
சொல்லாத சொல்லுக்கு அர்த்தமில்லை …
தேடும் பாசத்துக்கு தோல்வி இல்லை …
உண்மையான நம் உறவுக்கு மரணம் இல்லை...

நம்பிக்கை ....



முன்னைய நாளில் அன்னையே... !
நீ
என் முதுகில் ஏற்றிய
புத்தக பையை சுகமாய்
சுமந்தேன் எதிர்காலத்தில்
உன்னையும் சுமபேன் என்ற நம்பிக்கையோடு
இன்னும் அந்த நம்பிக்கையில் தான் நான் உயிர் வாழ்கிறேன்...

என் கனவுகள் ..!!


நான் காணும் பொருள்
எல்லாம் நீயாக வேண்டும்
நீ வாங்கும் பொருள்
எல்லாம் நானாக வேண்டும்

நான் பேச நினைப்பது எல்லாம்
உன்னை பற்றியதாய் அமைதல் வேண்டும்
நீ பேசும் மொழியாய் நான் இருத்தல் வேண்டும்

கனவிலும் உன் முகம் காணல் வேண்டும்
உன்னோடு நான் ஆனால் போதும் ....!!

வாழ்க்கையில்....





காதலிக்கவில்லை காதலில் தோற்பதற்கு 
அதிகமாய் ஆசைப்படுவதில்லை ஆசையில் தோற்பதற்கு
அதிகமாய் கல்வி கற்பதில்லை கல்வியில்  தோற்பதற்கு 
ஆனால் வாழ்க்கையில் தோற்றதாய் எண்ணுகிறேன் ....