Friday, April 19, 2013

போதை




கற்பனையில் மோகம் கொண்டால்
கவிதையில் போதை
ரகுமானின் மெல்லிசையால்
இசையில் போதை
அவளின் காதல் பார்வையால்
காதலில் போதை

படலையின்படைப்பில்
வலைப்பதிவில் போதை
நண்பர்களின் அரட்டையில்
முகப்புத்தகத்தில் போதை
பறவை போல் கீச்சிடுவதால்
டிவிட்டரில் போதை

உறவுகளின் அரவணைப்பில்
சொந்தத்தில் போதை
இறைவனின் விந்தை மிக்க படைப்புகளால்
தெய்விக சக்தியில் போதை
வாழ்க்கையின் காலசுழற்ச்சியில்
வாழ்வில் போதை

1 comments:

  1. இந்த போதை என்பது 3 வகைப்படும்.
    1. அரும் போதை
    2. பெரும் போதை
    3.அரும்பெரும் போதை
    காதல் என்னும் பதை காட்டி விட்ட ராதை. நல்ல பதிவு.
    எண்ணா யிரத்தாண்டு நீரிற் கிடந்தாலும்
    உண்ணீரம் பற்றாக் கிடையேபோல் – பெண்ணாவாய்
    பொற்றொடி மாதர் புணர்முலைமேற் சாகாரை
    எற்றோமற் றெற்றோமற் றெற்று.

    ReplyDelete