Saturday, April 26, 2014

நம் சொந்தத்தை கண்டேன்








குளியறையில்
உன் வதனம் எங்கும் விடியற்காலை
புல்லில் படர்ந்த பனித்துளிகள் போல்
நீர்த்துளியாய் -ஒவ்வொரு துளியிலும்
என் விம்பம் கண்டேன்

சமையலறையில்
உன் விழிகள் இருந்து ததும்பும்
ஒவ்வொரு துளிகளிலும்
என் உயிரை கண்டேன்

படுக்கையறையில்
உன்(நம்) கனவில்  நாம் இருவர்
நமக்கான இன்னுமொரு
நம் சொந்தத்தையும் கண்டேன்