Saturday, December 21, 2013

விடை தெரியாதவனாய் ..!





உன் நினைவுகளால் விடியக்காலை
மார்கழி பனி கூட என்னை சுடுகிறது,
வார விடுமுறை நாளில் கூட
என் நித்திரை பறி போகிறது.

பாலைவனத்தில் வளரும்
கள்ளிச்செடி போல்
உன் நினைவுகள் மட்டும்
என்னில் வளர்கிறதே ..!

என் வாழ்க்கையில் காதலெனும் ஓர்
புதிரை விதைத்தவள் நீ - நானோ
விடை  தெரியாதவனாய் ..!

என்று புரியும் என் நிலை உனக்கு
அன்று ஈடேறும் என் காதல் யாகம்