Saturday, December 21, 2013

விடை தெரியாதவனாய் ..!





உன் நினைவுகளால் விடியக்காலை
மார்கழி பனி கூட என்னை சுடுகிறது,
வார விடுமுறை நாளில் கூட
என் நித்திரை பறி போகிறது.

பாலைவனத்தில் வளரும்
கள்ளிச்செடி போல்
உன் நினைவுகள் மட்டும்
என்னில் வளர்கிறதே ..!

என் வாழ்க்கையில் காதலெனும் ஓர்
புதிரை விதைத்தவள் நீ - நானோ
விடை  தெரியாதவனாய் ..!

என்று புரியும் என் நிலை உனக்கு
அன்று ஈடேறும் என் காதல் யாகம்

Wednesday, September 25, 2013

கடிகார முட்களுடன் ..



உரிமையுடன் உறவாடும் 
உறவாய் நீ   இருந்தும் ,
என்னருகில் இல்லாத
 கணங்கள்  ஒவ்வொன்றும்
 - மரணவேதனையே 

Thursday, September 19, 2013

வீசும் புயலாய் பெண்ணே




நேற்று என் விழி முன்
வந்தாய்
நொடிப்பொழுதில் என் உயிரை
கரைத்தாய் பெண்ணே

என் மனதுக்குள் வானிலை
மாற்றினாய் பெண்ணே

இன்று என் கனவுக்கு நேற்றைய
உன் நினைவுகள்-பெண்ணே

Friday, April 19, 2013

போதை




கற்பனையில் மோகம் கொண்டால்
கவிதையில் போதை
ரகுமானின் மெல்லிசையால்
இசையில் போதை
அவளின் காதல் பார்வையால்
காதலில் போதை

படலையின்படைப்பில்
வலைப்பதிவில் போதை
நண்பர்களின் அரட்டையில்
முகப்புத்தகத்தில் போதை
பறவை போல் கீச்சிடுவதால்
டிவிட்டரில் போதை

உறவுகளின் அரவணைப்பில்
சொந்தத்தில் போதை
இறைவனின் விந்தை மிக்க படைப்புகளால்
தெய்விக சக்தியில் போதை
வாழ்க்கையின் காலசுழற்ச்சியில்
வாழ்வில் போதை