எதிர்பார்ப்புக்கள் நிறைந்த வாழ்க்கை
கானல் நீராய் போக- ஈரமான நெஞ்சம்
நீர் வற்ற
இழப்புக்கள் , பிரிவுகள் ஒருமித்ததாய்
எனக்கு பரிசளித்த
உறவின் உண்மையை என்னில் புகட்டி
கரையும் 2011
உண்மை நட்பின் ஆழத்தை
எனக்கு உணர வைத்து ,
நா வன்மையில்
ஆறுதல் அளித்த
என் தோழமை -நட்புக்கு
கல்வெட்டாய் 2011
புது உறவுகளின்
அறிமுகத்தை எனக்கு
வெளிச்சமிட்ட 2011
ஈற்றில் சேற்றில் பூக்கும்
தாமரை போல்
கவலைகள் நிறைந்த சேற்றில்
என் சொந்தத்தின்
பெறுபேறு
தாமரையாய் -என்னில்
விதைத்த 2011












