வரும் காலத்துக்கு முகவரி என்ன
என்று காலத்திடம் வினாவ
ஒரு நிமிடம் நிசப்தம் அடைகிறது
என் உளம்
விழிகள் எனும் இல்லத்தின்
இமைகள் என்னும் கதவுகளை
மெல்ல திறந்து விழிநீர்த் துளி
என் உடலை மெல்ல நனைக்கிறது
அப்போது
ஒரு கணம் என் சப்தம் அற்ற உள்ளம்
என்னிடம் வினாத் தொடுக்கிறது
நீ உன்னுள் செய்த
சத்தியங்களின் நிலை என்ன ??...
பெரு மூச்சு விட்டபடி
கரங்கள் கன்னத்தை தடவுகிறது ...
இவ்வாறாக தினமும் என் காலச்சக்கரம் சுழல்கிறது ....











