நான் சொன்ன முதல் வார்த்தை
எல்லோரும் சொல்லும் முதல் வார்த்தை.
எல்லோரும் சொல்லும் முதல் வார்த்தை.
நாங்கள் அன்றே சொன்ன முதல் கவிதை
அம்மா..!
ஆலயங்கள் தேடி சென்றாய்
இறைவனிடம் வரம் கேட்டாய்
ஆதலால் எனக்கு ,
கடவுள் நம்பிக்கையை தந்தாய் ..
அன்று உன் குரல் கேட்டு எழுந்த நான்
இன்று உன் குரலுக்காய் தவம் இருக்கிறேன்
என் உள்ளக் குமுறலை உன்னிடம் பகிர்ந்தேன்
இன்று உன் உள வேதனையை அறியாத பாவியாக நான்
அன்று என் விழியில் அரும்பிய ஒரு துளி நீருக்கு
ஆயிரம் வார்த்தைகளில் ஆறுதல் கூறினாய்
இன்று உன் விழியில் வரும் அருவிக்கு
அணை போட தெரியாமல் நான்
காலத்திடம் வினவுகிறேன்
என் தாயின் மடி சாயும் உன்னத காலம் எப்போது ...??
இறைவா உன்னிடம்
எண்ணும் நாட்கள் இன்னும் எவ்வளவு காலம் ...???












